×

காந்தி நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்வதற்கு முதல்வருக்கு பரிந்துரை

 

திருப்பூர், ஜன.1: திருப்பூர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள மார்க்கெட் வளாகத்தில் 1953-ம் ஆண்டு அமைக்கப்பட்ட காந்தி நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பலரும் வந்து பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் காலத்திற்கு ஏற்ப நூலகத்தை புனரமமைத்து கட்டிடத்தை விரிவாக்கம் செய்து வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என நூலகர்கள் செல்வராஜ் எம்.எல்.ஏவிடம், கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட செல்வராஜ் எம்.எல்.ஏ நூலகத்தை புனரமைத்து கட்டிடத்தை விரிவாக்கம் செய்ய, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்தார்.

இந்நிலையில் இதற்காக செல்வராஜ் எம்.எல்.ஏவுக்கு திருப்பூர் மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா மற்றும் நூலக வளர்ச்சிக்காக புரவலர்களாக இணைந்தவர்களுக்கு பாராட்டு விழா நேற்று காந்தி நூலகத்தில் நடந்தது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.
இந்நிகழ்ச்சியில் புரவலர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர் மு.க.உசேன், வார்டு செயலாளர்கள் முகமது ரபீக், முகமது அலி, பகுதி அவைத்தலைவர் தம்பி குமாரசாமி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சூர்யா, எம்.எல்.ஏ-. உதவியாளர் பக்ரூதீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

The post காந்தி நூலக கட்டிடத்தை விரிவாக்கம் செய்வதற்கு முதல்வருக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : Minister ,Gandhi Library ,Tirupur ,Tirupur Muthamil Scholar ,Dr. ,Kalainar Bus ,Stand ,Chief Minister ,Dinakaran ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...