×

ஸ்டாய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி

அடிலெய்டு: பிக்பாஷ் லீக் டி20 தொடரில், அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற மெல்போர்ன் ஸ்டார்ஸ் முதலில் பந்துவீச… அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன் குவித்தது. கேப்டன் மேத்யூ ஷார்ட் 56, டார்சி ஷார்ட் 25, ஆடம் ஹோஸ் 14, ஜேமி ஓவர்டன் 19 ரன் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய கிறிஸ் லின் 83 ரன் (42 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டார்ஸ் பந்துவீச்சில் மேக்ஸ்வெல் 2, ஜோயல் பாரிஸ், ரோச்சிசியோலி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 19 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 211 ரன் எடுத்து வென்றது. ரோஜர்ஸ் 8, டான் லாரன்ஸ் 50 (26 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கேப்டன் மேக்ஸ்வெல் 28 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பியூ வெப்ஸ்டர் 66 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), மார்கஸ் ஸ்டாய்னிஸ் 55 ரன்னுடன் (19 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஸ்டாய்னிஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

The post ஸ்டாய்னிஸ் அதிரடியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Melbourne Stars ,Stinneys ,Adelaide ,Adelaide Strikers ,Big Bash League T20 ,Adelaide Oval ,
× RELATED நிறுவனம், ஊழியர் இருதரப்பும் ஹேப்பி...