×

ராமர் கோயில் பெயரில் பணம் வசூல்: உ.பி. முதல்வரிடம் விஎச்பி புகார்

புதுடெல்லி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளை பெயரில் மோசடி ஆசாமிகள் சிலர் பணம் வசூல் செய்வதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அதன் தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் தனது எக்ஸ் பதிவில், ‘‘ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா பெயரில், ராமர் கோயில் அறக்கட்டளை என்று சொல்லி கொண்டு சிலர் பணம் வசூல் செய்து வருகின்றனர். மக்கள் இவர்களை நம்பி ஏமாற வேண்டாம். இது குறித்து உத்தர பிரதேச மாநில காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,’’ என்று கூறியிருப்பதுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அனுப்பிய அதன் நகலை இணைத்து பதிவிட்டுள்ளார்.

The post ராமர் கோயில் பெயரில் பணம் வசூல்: உ.பி. முதல்வரிடம் விஎச்பி புகார் appeared first on Dinakaran.

Tags : Ram ,Temple ,U.P. VHP ,New Delhi ,Ram Temple ,Ayodhya ,Modi ,Ayodhya Ram Temple Foundation ,Chief Minister ,
× RELATED திருத்துறைப்பூண்டி ராமர் கோயிலில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம்