×

மரங்களை கடத்திய வழக்கில் பாஜ எம்பியின் சகோதரர் கைது

பெங்களூரு: வனத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டி கடத்திய வழக்கில் பாஜஎம்பியின் சகோதரரை கர்நாடகா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா. இவர் மக்களவையில் புகுந்து கலர் குண்டு தாக்குதல் நடத்திய நபர்களுக்கு அனுமதி சீட்டு வழங்கிய சர்ச்சையில் சிக்கினார்.

இவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எதிர்கட்சிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன. இந்நிலையில் இவரது சகோதரர் விக்ரம் சிம்ஹா என்பவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைது செய்யப்பட்ட விக்ரம் சிம்ஹா, வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை இஞ்சி பயிரிடுவதற்காக குத்தகைக்கு எடுத்திருந்தார்.

ஆனால் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த 126 மரங்களை அனுமதியின்றி வெட்டி கடத்தியுள்ளார். அதையடுத்து அவர் மீது ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்துள்ளோம். மேல் விசாரணைக்காக அவரை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம்’ என்றனர்.

The post மரங்களை கடத்திய வழக்கில் பாஜ எம்பியின் சகோதரர் கைது appeared first on Dinakaran.

Tags : BJP ,Bengaluru ,Karnataka ,Pratap Simha ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED பாஜ எம்.பி தேஜஸ்வி சூர்யா மீது வழக்கு