×

உலகின் 2வது நாடாக நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது!!

கான்பெரா: உலகின் 2வது நாடாக நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறக்க உள்ளதையடுத்து உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் புத்தாண்டை வரவேற்க ஆயத்தமாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் புத்தாண்டை முன்னிட்டு பட்டாசு மற்றும் இனிப்புகளுடன் நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் சில மணி நேரமே உள்ள நிலையில் புத்தாண்டை வரவேற்பதற்காக பல்வேறு நகரங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் உலகின் 2வது நாடாக நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை ஒட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மக்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர். கேக் வெட்டியும், ஆடி பாடியும் புத்தாண்டை ஆஸ்திரேலிய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

The post உலகின் 2வது நாடாக நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது!! appeared first on Dinakaran.

Tags : Australia ,New Zealand ,Canberra ,New Year ,
× RELATED 2-2 என தொடரை சமன் செய்தது பாக்.