×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு: ஒரு கிலோ மல்லி ரூ.2,300

அண்ணாநகர்: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்கள் விலை உயர்ந்துள்ளது.ஆங்கில புத்தாண்டு நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூக்களை வாங்குவதற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் குவிந்துள்ளதால் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை ஒரு கிலோ மல்லி 2, 300க்கும் ஐஸ் மல்லி 1,800க்கும் முல்லை மற்றும் கனகாம்பரம் 1,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜாதிமல்லி 900க்கும் அரளி பூ 350க்கும் சாமந்தி 100க்கும் சம்பங்கி 250க்கும் பன்னீர் ரோஸ் 140க்கும் சாக்லேட் ரோஸ் 160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதால் இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்ந்தாலும் பூக்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள் குவிந்துவருவதால் வியாபாரம் களைகட்டியுள்ளது. ஊட்டி ரோஸ் பஞ்ச் 250 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் வியாபாரிகள், விவசாயிகள் கடும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.

The post ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு: ஒரு கிலோ மல்லி ரூ.2,300 appeared first on Dinakaran.

Tags : English New Year ,Annanagar ,Koyambedu ,Chennai ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...