×

பெங்களூருடன் இன்று மோதல்: வெற்றி பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்?

நொய்டா: 12 அணிகள் பங்கேற்றுள்ள 10வது புரோ கபடி லீக் தொடரில் தற்போது உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தற்போது போட்டிகள் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 47வது லீக் போட்டியில் யு மும்பா 52-34 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தபாங் டெல்லி-உ.பி.யோத்தா அணிகள் மோதின. டெல்லி கேப்டன் நவீன்குமார் காயத்தால் ஆடா விட்டாலும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய டெல்லி முதல் பாதியில் 17-12 என முன்னிலை பெற்றது.

2வது பாதியிலும் சிறப்பாக ஆடிய டெல்லி 18 , உ.பி. 13 புள்ளி எடுத்தன. முடிவில் 35-25 என டெல்லி வெற்றி பெற்றது. 8வது போட்டியில் அந்த அணிக்கு இது 4வது வெற்றியாகும். உபி. 9வது போட்டியில் 5வது தோல்வியை சந்தித்தது. டெல்லி ரைடர் ஆஷு மாலிக் அதிகபட்சமாக 11 புள்ளி எடுத்தார். இன்று இரவு 8 மணிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ், இரவு 9 மணிக்கு தமிழ்தலைவாஸ்-பெங்களூரு புல்ஸ் மோதுகின்றன. தமிழ்தலைவாஸ் 8 போட்டியில் 2 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன 11வது இடத்தில் உள்ளது. தொடர்ச்சியாக 5 தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இன்று வெற்றிபாதைக்கு திரும்புமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post பெங்களூருடன் இன்று மோதல்: வெற்றி பாதைக்கு திரும்புமா தமிழ் தலைவாஸ்? appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Tamil Thalaivas ,Noida ,10th Pro Kabaddi League ,Noida, Uttar Pradesh ,U Mumba ,Telugu ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்