×

ரபாடாவின் இன்ஸ்விங்கை சமாளிக்க முகேஷ்குமார் பவுலிங்கில் 45 நிமிடம் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சி

கேப்டவுன்: தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்சிஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் 2வது டெஸ்ட் கேப்டவுனில் வரும் 3ம் தேதி தொடங்குகிறது. முதல்டெஸ்ட்டில் இந்தியா படுதோல்வியை அடைந்ததால் விமர்சனங்கள் எழுந்த நிலையில் 2வது டெஸ்ட்டில் பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இதற்காக வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் டெஸ்ட்டில் சொதப்பி வரும் கேப்டன் ரோகித்சர்மா, முகேஷ்குமாரின் பந்துவீச்சில் 45 நிமிடம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். 4 மற்றும் 6 மீட்டர் பகுதிகளுக்கு தொடர்ந்து பந்துவீச வைத்து பயிற்சி மேற்கொண்டார். முதல் டெஸ்ட்டில் ரபாடா வீசிய இன்கமிங் பந்துகளில் தடுமாறிய நிலையில் அதனை சமாளிப்பதற்காக அவர் இவ்வாறு பயிற்சி மேற்கொண்டார்.
2வது டெஸ்ட் குறித்து அவர் கூறுகையில், முதலாவது டெஸ்ட்டில் நாங்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தோல்வியை சந்தித்தோம்.அதிலும் குறிப்பாக மூன்று நாட்களுக்குள் இப்படி ஒரு தோல்வியை ஏற்றுக் கொள்வது கடினமாகவே உள்ளது.

கே.எல் ராகுலை தவிர்த்து மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் இங்குள்ள சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் நிச்சயம் இரண்டாவது போட்டிக்கு முன்னதாக சிறப்பான முறையில் தயாராகி வெற்றி பெறும் வகையில் விளையாடுவோம், என்றார்.இதனிடையே பயிற்சியின்போது இடது தோள் பட்டையில் காயம் அடைந்த ஆல்ரவுண்டர் ஷர்துல் தாகூர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசியில்லாத மைதானம்: 2வது டெஸ்ட் நடக்கும் கேப்டவுன் நியூலேண்ட்ஸ் மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானமாகும். இங்கு தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக 6 டெஸ்ட்டில் ஆடி உள்ள இந்தியா 4ல் தோல்வி அடைந்துள்ளது. 2 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் நடந்த டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

The post ரபாடாவின் இன்ஸ்விங்கை சமாளிக்க முகேஷ்குமார் பவுலிங்கில் 45 நிமிடம் ரோகித் சர்மா பேட்டிங் பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Mukesh Kumar ,Rabada ,Cape Town ,South Africa ,Centurion ,India ,Mukeshkumar ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...