×

நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது PSLV C58 ராக்கெட்: பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் PSLV C58 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எக்ஸ்போ சாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி58 நாளை விண்ணில் ஏவப்படுகிறது. ஆந்திர மாநில ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 9.10 மணிக்கு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது.

செயற்கோள்கள் விண்ணில் உள்ள தூசு, நிறமாலை, வாயுக்களின் மேகக்கூட்டமான நெபுலாவை எக்ஸ்போ சாட் ஆராய உள்ளது. திருவனந்தபுரம் கல்லூரி மாணவிகள் தயாரித்த வெசாட் செயற்கைகக்கோளும் ஏவப்படுகிறது.

விண்ணில் செலுத்தப்படும் மொத்தம் 469 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ. தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்க உள்ளது. இதனிடையே பழவேற்காடு மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் நாளை பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் ஏவப்படவுள்ள நிலையில் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது PSLV C58 ராக்கெட்: பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை appeared first on Dinakaran.

Tags : Sriharikota ,AP ,ISRO Space Research ,Dinakaran ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?