×

தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்

டெல்லி: தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி பிரியா ரவிசந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் (Non state Civil service) ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ்ஆக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் இருந்து 2022-ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., பிரிவு அதிகாரியாக பிரியா தோ்வாகியுள்ளாா்.

கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பிரியா பணியில்
சோ்ந்தாா். தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநராக நிலைக்கு அவர் உயா்ந்தாா். மாநில அரசின் பரிந்துரைப்படி ஆண்டுதோறும் காலியாக உள்ள குறிப்பிட்ட சில இடங்களுக்கு குரூப் 1 அதிகாரிகள் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவா்.

இந்த நடைமுறையின்படி, 2022-ஆம் ஆண்டு காலியாகவுள்ள இடத்துக்கு தீயணைப்புத்
துறை இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன் தோ்வாகியுள்ளாா். தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவா் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக தோ்வாகியிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The post தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் appeared first on Dinakaran.

Tags : Priya Ravichandran ,Fire Department ,Delhi ,Tamil Nadu Fire Department ,Civil Service ,IAS ,Dinakaran ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு