×

கால்நடை பராமரிப்புத்துறையில் சரண்டர் விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும்: அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் வலியுறுத்தல்

 

புதுக்கோட்டை, டிச.31: சரண்டர் விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும் என்று கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சுப்பணி அலுவலர் சங்கத்தின் மாநில மத்திய செயற்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் துறையில் பணிபுரிந்து வரும் உதவியாளர்கள் அனைவருக்கும் கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்கள் அனைவருக்கும் உதவியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். டிஎன்பிசி மூலம் 20 நேரடி உதவியாளர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சரண்டர் விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும். துறையில் காலியாக உள்ள பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கால்நடை பராமரிப்புத்துறையில் சரண்டர் விடுப்பிற்கான ஊதியம் வழங்க வேண்டும்: அமைச்சுப்பணி அலுவலர் சங்கம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Animal Husbandry Department ,Ministerial Officers' Association ,Pudukottai ,Animal Husbandry Ministerial Officers Association ,State Central Executive Committee ,Tamil Nadu Animal Husbandry Ministerial Officers Association ,president ,Shankar... ,Sangam ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் நேரத்தில் உடல்...