×

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 

காரைக்கால்,டிச.31: திருநள்ளாறில் உள்ள உலக புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உலக பிரசித்தி பெற்ற  தர்பாரண்னேஸ்வரர் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப் பெயர்ச்சி ஆனது கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில் சனீஸ்வரர் மாலை 5.20 மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி பெற்றார்.

மேலும் நேற்று சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்ற இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்  சனீஸ்வர பகவான் ஆலயத்திற்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. மேலும் திருநள்ளாறு நகரம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பக்தர்கள் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடி, கலிதீர்த்த விநாயகரை வணங்கி சிதறு தேங்காய் உடைத்து பின்னர் சனீஸ்வர பகவானை வழிபட்டு அவருக்கு உகந்த எள் தீபம் ஏற்றி வழிப்பட்டனர்.

The post திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirunallaru Saneeswara Bhagavan ,Temple ,Karaikal ,Saneeswara Bhagavan temple ,Thirunallar ,Darparanneswarar Saneeswara Bhagwan temple ,Thirunallaru Saneeswara Bhagwan ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...