×

கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார்சாலை சீரமைப்பு

 

தோகைமலை, டிச.31: கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சியில் பழுதான தார்சாலையை தினகரன் செய்தி எதிரொலியால் புதிய தார்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளதால் 3 கிராம பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கரூர் மாவட்டம் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வீரகவுண்டம்பட்டி, எல்லைக்காட்டானூர் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு சேர்வைகாரன்பட்டி-முள்ளிப்பாடி மெயின் ரோட்டில் வீரகவுண்டம்பட்டியில் உள்ள கருமாதி புளியமரம் பகுதியில் இருந்து தொடங்கும் சாலையானது, எல்லைக்காட்டானூர் வழியாக திருச்சி மாவட்ட எல்லையான சீகம்பட்டி வரை பிரிவு ரோடு செல்கிறது. இந்த சாலையானது வீரகவுண்டம்பட்டியில் இருந்து எல்லைக்காட்டானூர் வழியாக சீகம்பட்டி வரை சுமார் 3 கிமீ தூரம் அமைந்து உள்ளது.

இந்நிலையில் வீரக்கவுண்டம்பட்டி முதல் சீகம்பட்டி வரை செல்லம் தார்சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டதால் தார்சாலையில் உள்ள கற்கள் பெயர்ந்து பல்வேறு இடங்களில் குண்டும் குழியுமாக காட்சி அளித்து வந்தது. மேலும் தார் சாலையே தெரியாமல் மெட்டல் சாலைபோல் (கற்கள் சாலை) காட்சி அளித்து வந்தது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மிகுந்த சிறமத்திற்கு இடையில் சென்று வந்தனர். இதேபோல் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ்கள் வருவதற்கும் இடையூராக இருந்ததாக இப்பகுதி பொதுமக்கள் தொிவித்து வந்தனர்.

இதனால் கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி வீரக்கவுண்டம்பட்டியில் இருந்து சீகம்பட்டி வரை செல்லும் பழுதான தார்சாலையை புதிய தார்சாலையாக அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, வீரக்கவுண்டம்பட்டி, எல்லைகாட்டானூர், சீகம்பட்டி ஆகிய 3 கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்த செய்தி தினகரன் செய்தி நாளிதழில் வெளிவந்தது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் தங்கவேல் உத்தரவின் போில் வீரக்கவுண்டம்பட்டியில் இருந்து சீகம்பட்டி வரை புதிய தார்சாலையாக அமைக்கப்பட்டு பணிகள் முடிந்து உள்ளது. இதனால் 3 கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் தினகரன் நாளிதழுக்கு நன்றி தொிவித்துள்ளனர். சாலை சீரமைத்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

The post கடவூர் அருகே முள்ளிப்பாடி ஊராட்சியில் குண்டும், குழியுமான தார்சாலை சீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Mullipadi panchayat ,Kadavur ,Thokaimalai ,Dinakaran ,Veeragaundampatti ,Karur district ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...