×

பெரியகுளம் பகுதி செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

 

பெரியகுளம், டிச. 31: பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி, காமட்சி அம்மன் கோவில், மஞ்சளார், சில்வார்பட்டி உள்ளிட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் பொங்கல் கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் பொங்கல் கரும்பு பயிரிட்ட நிலையில், தற்பொழுது கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் பொங்கல் கரும்பு சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ளாமல் கைவிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 10 கரும்புகள் உள்ள ஒரு கட்டின் விலை ரூ.320 முதல் ரூ.350 வரை விலை போனது. இந்தாண்டு உரம் விலை, வேலை ஆட்கள் கூலி, உள்ளிட்ட சாகுபடி செல்வு அதிகரித்துள்ளதால் 10 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பின் விலை ரூ.400க்கு மேல் விற்றால்தான் விவசாயிகள் வருவாய் ஈட்ட முடியும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பொருட்களில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ஒரு முழு கரும்பு வழங்க விவசாயிகளிடம் ரூ.33க்கு கரும்பு கொள்முதல் செய்ய உத்தரவிட்டது. இதனால் கரும்பு விவசாயிகளுக்கு ஓரளவிற்கு வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டு தமிழக அரசு கொள்முதல் செய்யும் ஒரு கரும்பிற்கு ரூ.5 வரை விலையேற்றம் செய்து கொள்முதல் செய்தால் நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

The post பெரியகுளம் பகுதி செங்கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Govt ,Periyakulam ,Devadanapatti ,Kamatchi Amman Kovil ,Manjalar ,Silwarpatti ,Dinakaran ,
× RELATED வத்தலக்குண்டு- பெரியகுளம் சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் அவதி