×

சீன நாடாளுமன்றத்தில் 9 ராணுவ ஜெனரல்கள் அதிரடி தகுதி நீக்கம்

பீஜிங்: சீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து 9 ராணுவ ஜெனரல்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீன நாடாளுமன்றத்தில் அந்நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் பலர் தேசிய பிரதிநிதிகளாக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், சீன ராணுவத்தின் 5 முன்னாள் ஜெனரல்கள் மற்றும் ராக்கெட் படையின் தற்போதைய மூத்த கமாண்டர் ஒருவர் உட்பட 9 ராணுவ ஜெரனல்கள் நாடாளுமன்றத்தில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்படுவதாக நாடாளுமன்ற நிலைக்குழு நேற்று முன்தினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கான காரணம் வெளியிடப்படவில்லை. ராணுவ ஜெனரல் லி ஷாங்பூ பதவி நீக்கம் செய்யப்பட்டு 2 மாதத்திற்குப் பின் புதிய பாதுகாப்பு அமைச்சராக கடற்படை தளபதி டோங்க் ஜன் நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 9 ராணுவ ஜெனரல்கள் தேசிய பிரதிநிதிகள் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் சிலர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post சீன நாடாளுமன்றத்தில் 9 ராணுவ ஜெனரல்கள் அதிரடி தகுதி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Beijing ,Chinese Parliament ,Chinese ,army ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்