×

தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு

நிலக்கோட்டை, டிச. 31: ஹரியானா மாநிலத்தில் வரும் ஜன.2 முதல் ஜன.6ம் தேதி வரை தேசிய அளவிலான (பனிச்சறுக்கு) ஐஸ் ஸ்கேட்டிங் போட்டி நடக்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க சின்னாளப்பட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் தேர்வாகியுள்ளனர். தமிழ்நாடு அணி சார்பில் விளையாடுவதற்காக முதல்முறையாக திண்டுக்கல் மாவட்டம் சார்பில் 16 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

6-8 வயது, 8-11 வயது, 11-13 வயது, 13-15 வயது, 15-17 வயது, 17-19 வயது உள்ளிட்ட பிரிவுகளில் நடைபெறும் போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் தேசிய அளவிலான ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் கலந்து கொள்ள ஹரியானா செல்லும் மாணவ, மாணவிகளை பயிற்சியாளர் பிரேம்குமார் தலைமையில் வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விளையாட்டு வீரர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post தேசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டிக்கு தேர்வு திண்டுக்கல் மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Dindigul District ,National Ice Skating Competition ,Nilakottai ,Haryana ,Rajan Indoor Stadium ,Chinnalapatti ,
× RELATED திண்டுக்கல்லில் லீக் கால்பந்து போட்டி