×

9வது சைவ சமய மாநாடு நிகழ்ச்சி ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமி பங்கேற்பு செய்யாறு திருமுறை வளர்ச்சி மன்றம் சார்பில்

செய்யாறு, டிச.31: செய்யாறில் திருமுறை வளர்ச்சி மன்றம் சார்பில், நேற்று நடந்த 9வது சைவ சமய மாநாடு நிகழ்ச்சியில் ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் பங்கேற்று அருளாசி வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மார்க்கெட் பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் திருமுறை வளர்ச்சி மன்றம் சார்பில் 9வது சைவ சமய மாநாடு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியின் தொடக்கமாக காலை செய்யாறு அருமையான பெருவெளி தலைவர் புலவர் ஞான ஏகாம்பரம் இடம்பக்குடி ஏற்றி வைத்து நெறியாளர் விநாயகர் வீரமணி கொடி கவி பாடினார். தொடர்ந்து ரத்தினகிரி தவத்திரு பாலமுருகன் அடிமை சுவாமிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று அருளாசி வழங்கினார். அதனை தொடர்ந்து திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் புலவர் சரவண சதாசிவம் அருள்ஞான பெருவெளி அறக்கட்டளை தலைவர் முத்துக்குமரன், பச்சீஸ்வரர் கோயில் வார வழிபாட்டு குழு தலைவர் காளத்தி ஆரணி சைதாப்பேட்டை கார்த்தி, மன்றத்தலைவர் ஆறுமுகம் முன்னிலையில் காஞ்சிபுரம் திருமுறை பணி சண்முகப்பிரியா இசை நிகழ்ச்சி நடத்தினார்.

பின்னர், புலவர் மெய் பூங்கோதை, சமயத்தொண்டு மன்றம் மதிவாணன், சைவ சமய பேரவை முனுசாமி, காஞ்சிபுரம் சச்சிதானந்தம், செய்யாறு அரசு கல்லூரி தமிழ் துறை தலைவர் கு.கண்ணன் ஆகியோர் கருத்தரங்கம் நிகழ்த்தினார். தொடர்ந்து அன்னே உன்னை எல்லாம் இனியாரை நினைக்கேனே என்ற தலைப்பில் அரசு கல்லூரி முதல்வர் ந.கலைவாணி பேசினார். தொடர்ந்து பிற்பகல் 2 மணி அளவில் திருமறை இன்னிசை நிகழ்ச்சியில் சென்னை திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் ஓதுவார் மாசிலாமணி தேசிகர் இசை நிகழ்ச்சி நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து உள்ளம் பெருங்கோயில் என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் எம்.மாணிக்கவாசகம் கருத்தரங்கு உரையாற்றினார்.‌ நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருமறை வளர்ச்சி பணி மன்ற தலைவர் ஆறுமுகம், செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் ரகுநாதன், துணைத்தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். திருமுறை வளர்ச்சிப்பணி சைவ சமய மாநாட்டில் ஏராளமான ஆன்மீக தொண்டர்களும் பக்தர்களும் பங்கேற்று இருந்தனர்.

The post 9வது சைவ சமய மாநாடு நிகழ்ச்சி ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமி பங்கேற்பு செய்யாறு திருமுறை வளர்ச்சி மன்றம் சார்பில் appeared first on Dinakaran.

Tags : 9th Saiva religious conference program ,Ratnagiri Balamurugan Adhu Swami ,Thiruparish Development Council ,Seyyar ,Tirumipir Vaksha Mandam ,Ratnagiri Tavathiru Balamurugan Adhuswamy ,9th Saiva religious conference ,Tiruvannamalai district ,Seiyaru ,9th Saivite religious conference program ,Ratnagiri Balamurugan Adhaswamy ,Seiyaru Thirumip Vaksha Mandam ,
× RELATED அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு...