×

பள்ளி அருகில் புகையிலை விற்ற 21 கடைகளுக்கு அபராதம் செய்யாறு அருகே அதிகாரிகள் அதிரடி

செய்யாறு, டிச.31: செய்யாறு அருகே பள்ளிக்கு அருகாமையில் புகையிலை பொருட்கள் விற்ற 21 பெட்டிக்கடைகளுக்கு தலா ₹200 அபராதம் விதித்து சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ராந்தம், மோரணம் கிராமத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தனசேகர் தலைமையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு அருகில் உள்ள பொட்டி கடைகளில் திடீர் சோதனையில் செய்தனர். அப்போது அந்த கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள 21 கடைகளில் பீடி, சிகரெட், புகையிலை போன்றவை பள்ளிக்கு அருகிலும், குழந்தைகள் உட்கொள்ளும் தின்பண்டங்கள் விற்கும் கடைகளில் புகையிலைப்பொருட்கள் விற்கக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 21 கடைகளில் தலா ₹200 வீதம் ₹4,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வில் நலக்கல்வி அலுவலர் எல்லப்பன், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

The post பள்ளி அருகில் புகையிலை விற்ற 21 கடைகளுக்கு அபராதம் செய்யாறு அருகே அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Yaru ,Seyyar ,health ,Nateri Government Primary Health Center ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED செய்யாறில் இன்று திருமணம் நடக்க...