×

சில்லி பாய்ண்ட்

* மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் மற்றும் நிர்வாகிகளுக்கு எதிரான பாலியல் புகார் சர்ச்சையில், முன்னணி வீராங்கனை வினேஷ் போகத் தனது கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளை திருப்பிக் கொடுக்கப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், பிரதமரை நேரில் சந்திக்க அவரது வீட்டுக்கு சென்ற வினேஷ் போகத்தை டெல்லி போலீசார் தடுத்து நிறுத்தியதை அடுத்து நடைபாதையில் விருதுகளை வைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். பின்னர், விருதுகளை போலீசார் கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.

* தென் ஆப்ரிக்கா அணியுடனான முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் நேற்று தீவிரமாகப் பயிற்சி செய்தனர். கேப்டன் ரோகித் ஷர்மா வேகப் பந்துவீச்சாளர் முகேஷ் குமாரின் பந்துகளை எதிர்கொண்டு 45 நிமிடத்துக்கு வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். முழு உடல்தகுதியுடன் விளையாடத் தயாராகி உள்ள ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் உற்சாகமாகப் பந்துவீச்சு பயிற்சி செய்தார். ஆல் ரவுண்டர் ஷர்துல் தாகூர் பேட்டிங் பயிற்சியின்போது தோள்பட்டையில் பந்து தாக்கியதால் காயம் அடைந்தார். இதனால் அவர் 2வது டெஸ்டில் களமிறங்குவது கேள்விக்குறியாகி உள்ளது.

* இந்திய அணி முன்னணி வீரர் சுப்மன் கில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் கணிசமாக ரன் குவித்து அசத்தி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ரன் குவிக்க முடியாமல் தடுமாறி வருகிறார். 2023ல் அவர் விளையாடிய 6 டெஸ்டில் 258 ரன் மட்டுமே எடுத்துள்ளார் (சராசரி: 28.00). இது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், ‘டெஸ்ட் போட்டிகளில் கில் ஆக்ரோஷமாக விளையாட முயற்சிக்கிறார். ஒருநாள், டி20 போட்டிகளுக்கும் டெஸ்ட் போட்டிக்கும் சிறு வித்தியாசம் உள்ளது. வெள்ளைப் பந்து போல இல்லாமல், சிவப்பு பந்துகள் காற்றில் சற்று அதிகமாக ஸ்விங் ஆவதுடன் ஆடுகளத்தில் இருந்து கூடுதலாக எகிறி வரும். இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்’ என்றார்.

The post சில்லி பாய்ண்ட் appeared first on Dinakaran.

Tags : Vinesh Phogat ,
× RELATED சாக்‌ஷி மாலிக், பஜ்ரங் புனியா,...