- கர்நாடக
- கல்வி அமைச்சர்
- மது பங்காரப்பா
- பெங்களூரு
- அமைச்சர்
- கர்நாடகா மாநிலம்
- பள்ளி
- ஆகாஷ் ஆடியோ-வீடியோ நிறுவனம். ...
- பள்ளி கல்வி அமைச்சர்
- தின மலர்
பெங்களூரு: காசோலை மோசடி வழக்கில் மாநில பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா குற்றவாளி என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநில பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா, ஆகாஷ் ஆடியோ – வீடியோ நிறுவனத்தின் இயக்குநராக முன்பு இருந்தார். அப்போது மது பங்காரப்பாவின் நிறுவனத்திற்கும், ராஜேஷ் ஏற்றுமதி நிறுவனத்திற்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி, ரூ.6.6 கோடிக்கான காசோலையை மது பங்காரப்பா அந்நிறுவனத்திற்கு கொடுத்திருந்தார்.
ஆனால் அந்த காசோலை 2011ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி பவுன்ஸ் ஆனது. இதையடுத்து தன் மீதான காசோலை மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி மது பங்காரப்பா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பின்னர் நிலுவைத்தொகை ரூ.6.10 கோடியை 2024ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதிக்குள் முழுமையாக செலுத்திவிடுவதாக மது பங்காரப்பா தெரிவித்தார். ஆனால் அவரது கருத்தை ஏற்க மறுத்தசிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கில் ஆகாஷ் ஆடியோ – வீடியோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் முதல் குற்றவாளியாகவும், மது பங்காரப்பா 2வது குற்றவாளியாகவும் சேர்த்தது. மேலும், 6 மாதம் சிறை தண்டனை விதித்தது.
The post கர்நாடகா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா குற்றவாளி: 6 மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.