×

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜனவரி 28ம் தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். ஆனால், மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால் சம்பா சாகுபடிக்காக ஒரு சொட்டு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை நெற்பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கருகி உழவர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இப்போது சம்பா பயிருக்கும் அதேநிலை ஏற்பட்டால் ஈடு செய்ய முடியாத இழப்பும், கடன்சுமையும் ஏற்படும். தற்போது மேட்டூர் அணையில் 34 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. அதைக் கொண்டு வினாடிக்கு 6000 கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால், நேரடிப் பாசனம், நீர்நிலைகளை நிரப்புவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு மூலம் சம்பா மற்றும் தாளடி பயிர்களைக் காப்பாற்றலாம். எனவே உடனடியாக மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

The post சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mettur dam ,Chennai ,B.M.K. ,Ramadas ,Cauvery ,Samba ,Mettur ,Dam ,Ramadas' ,
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!