×

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரியின் பதவி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை விசாரித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில், அன்றைய மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி சைலேஷ் குமார் யாதவ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த கபில் குமார் சரத்கர், துணை வட்டாட்சியராக இருந்த சேகர் உள்ளிட்ட காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால், அன்றைய தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ் டிஜிபியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார். இது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. எனவே,அவருக்கு டிஜிபி பதவி உயர்வை மறுபரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்.

The post ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரியின் பதவி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sterlite ,K. Balakrishnan ,Tamil Nadu government ,CHENNAI ,CPM ,State Secretary ,Aruna Jegatheesan ,Venkatesh ,South Zone ,IG ,Sailesh Kumar Yadav ,Dinakaran ,
× RELATED ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு.. 6ம்...