×

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை திறந்து வைத்த தமிழக முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் 110 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் ரூ.394 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் கட்டப்படும் என்று அறிவித்தார். இதனையடுத்து 2018ம் ஆண்டு அதற்கான டெண்டர் விடப்பட்டது.

பின்னர் 2019-ல் தொடங்கப்பட்ட நவீன பேருந்து நிலையம் கட்டுமான பணி முடிவடைந்து அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல், எளிமையான முறையில், மேடை அமைக்காமல் நடைபெற்ற விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11 மணியளவில் கலைஞர் நூற்றாண்டு முனையம் பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் கலைஞர் திரு உருவ சிலையை திறந்து வைத்தார்.

இதனையடுத்து பேட்டரி காரில் சென்று அரசு விரைவு பேருந்து, மாநகர பேருந்து மற்றும் ஏசி பேருந்து ஆகியவற்றை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மேலும் காவேரி மருத்துவமனையை பார்வையிட்டு அருகில் உள்ள ஆவின் பால் நிலையத்திற்கான சாவியை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வழங்கினார்.
இந்நிலையில் நிகழ்ச்சிக்கு முன்னதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைக்க வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, காஞ்சிபுரம் எம்பி செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன், ஒன்றிய சேர்மன் உதயாகருணாகரன், ஊரப்பாக்கம் கிளை செயலாளர் கார்த்தி,

ஊரப்பாக்கம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி, பெருமாட்டுநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் சித்ரா ரவி, ஒன்றிய மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு, நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீ சீனிவாசன் ஆகியோர் தலைமையில் மங்கள வாத்தியங்கள் முழங்க, பூரண கும்பத்துடன் 101 கலசங்கள் கையில் ஏந்தி, வழிநெடுக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் அணி, இளைஞர் அணி, மாணவரணி மற்றும் கட்சி தொண்டர்கள் கையில் திமுக கொடியை ஏந்தியபடி ஆரவாரத்துடன் முதல்வருக்க்உ உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

The post கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு: அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Chief Minister ,M.K.Stalin ,Klambakkam ,Kuduvanchery ,Tamil ,Nadu ,Klambach ,AIADMK ,GST ,Vandalur ,Klampakkam, Chennai ,CM ,M.K. Stalin ,Klampakkam Bus Station ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...