×

அமோனியா வாயு வெளியேறிய விவகாரம் கோரமண்டல் தொழிற்சாலை இன்னும் திறக்கப்படவில்லை: நிர்வாகம் தகவல்

சென்னை: சென்னை எண்ணூரில் இயங்கி வரும் கோரமண்டல் இண்டர்நேஷனல் லிமிடெட் தொழிற்சாலையில் உள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு திடீரென அமோனியா வாயு சமீபத்தில் வெளியேறி குடியிருப்புப் பகுதி பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் போன்ற உபாதைகள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த தனியார் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த நிலையில் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக கோரமண்டல் தொழிற்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தொழிற்சாலை அரசு அனுமதி பெற்று திறக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளது. அது உண்மை இல்லை. தொழிற்சாலை இன்னும் இயங்கவில்லை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளின்படி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளது.

The post அமோனியா வாயு வெளியேறிய விவகாரம் கோரமண்டல் தொழிற்சாலை இன்னும் திறக்கப்படவில்லை: நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Coromandel ,CHENNAI ,Coromandel International Limited ,Ennoor, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...