×

முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி: 2வது டெஸ்ட்டில் ஆடும் லெவனில் ஜடேஜா, அவேஷ்கானுக்கு இடம்

கேப்டவுன்: இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் 2வது டெஸ்ட் வரும் 3ம்தேதி கேப்டவுனில் தொடங்க உள்ளது. முதல் டெஸ்ட்டில் பிரசித் கிருஷ்ணா பவுலிங்கில் சொதப்பிய நிலையில் அவரின் தேர்வை மாஜி வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

இதனிடையே 2வது டெஸ்ட்டில் அவேஷ்கான் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக அவர் அணியில் இடம் பெறுவார் என தெரிகிறது. அதேபோல் ஷர்துல் தாகூர் அல்லது அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா ஆடும் லெவனில் இடம் பெறக்கூடும்.

The post முதல் போட்டியில் இந்தியா படுதோல்வி: 2வது டெஸ்ட்டில் ஆடும் லெவனில் ஜடேஜா, அவேஷ்கானுக்கு இடம் appeared first on Dinakaran.

Tags : India ,Jadeja ,Avesh Khan ,Cape Town ,South Africa ,Centurion ,Dinakaran ,
× RELATED சர்வதேச டி20 போட்டியில் இருந்து...