×

சொத்து குவிப்பு வழக்கு: மோட்டார் வாகன ஆய்வாளர் கைது

திருமலை: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ரட்டகொண்டா வெங்கட மதுசூதன் என்பவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக விஜயவாடாவில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் மோட்டார் வாகன ஆய்வாளர் ரட்டகொண்டா வெங்கட மதுசூதன் வீடு மற்றும் அவருக்கு ெசாந்தமான 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர்.

அதன்படி திருப்பதி, மதனப்பள்ளி, பலமநேர், சித்தூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் திருப்பதியில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் தலா ஒரு வீட்டுமனை, மதனப்பள்ளியில் 2 அடுக்குமாடி வீடு, புலவண்டலப்பள்ளியில் 1 விருந்தினர் மாளிகை, பலமநேரில் 23 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

வெங்கடமதுசூதன் மனைவி மற்றும் அவரது தந்தையின் பெயரில் 15 வீட்டுமனைகள் மதனப்பள்ளி, திருப்பதி, சித்தூர் மாவட்டம் பலமநேர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய இடங்களில் இருப்பது தெரியவந்தது. மேலும் ரூ30 லட்சம் மதிப்புள்ள 3 கார்கள், ரூ1.25 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பைக், ரூ5.10 லட்சம்,சுமார் ரூ81 லட்சம் மதிப்புள்ள 2055 கிராம் தங்கம், ரூ2.4 லட்சம் மதிப்புள்ள வெள்ளிப்பொருட்கள், ரூ26 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்கள், 10 லட்சம் வங்கி கணக்கில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கட மதுசூதன் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நெல்லூர் சிறப்பு லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சொத்து குவிப்பு வழக்கு: மோட்டார் வாகன ஆய்வாளர் கைது appeared first on Dinakaran.

Tags : THIRUMALI ,AP STATE CHITTOOR ,RATAKONDA ,VIJAYAWADA ,Mundinam ,Dinakaran ,
× RELATED அரசியல் சாசனத்தை மாற்ற சதி; எஸ்.சி.,...