×
Saravana Stores

நிலத்திலும், நீரிலும் வசிக்கும் வெளிநாட்டு பறவை: 30 ஆண்டுக்கு பிறகு கோடியக்கரை வருகை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் இந்த சரணாலயத்திற்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 294க்கும் மேற்பட்ட வகை பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

தற்போது சீசன் உச்சக்கட்டத்தில் உள்ளது. செங்கால்நாரை, கூழைகிடா, பூநாரை, கடல்காகம், கடல்ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலைவாத்து உள்ளிட்ட பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. குறிப்பாக 30 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சாம்பல் கால் கானாங்கோழிகள் தற்போது வந்துள்ளது. இவை தெற்காசிய பகுதியில் இருந்து வந்துள்ளன.

பறவைகள் சரணாலயத்தில் அடிக்கடி மழை பெய்ததால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. இது பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகும். எனவே இந்த ஆண்டு கூட்டம், கூட்டமாக பறவைகள் வந்து அமர்ந்துள்ளதையும், பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்துள்ளது.

இந்த பறவைகளை இரட்டை தீவு, கோவை தீவு, நெடுந்தீவு, பம்ப் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காலை, மாலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர். 30 ஆண்டுக்கு பிறகு வந்துள்ள சாம்பல் கால் கானாங்கோழி சிகப்பு, கறுப்பு, வெள்ளை மரக்கலரில் காணப்படும். இப்பறவை நிலத்திலும், நீரிலும் வசிக்கக் கூடியது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

The post நிலத்திலும், நீரிலும் வசிக்கும் வெளிநாட்டு பறவை: 30 ஆண்டுக்கு பிறகு கோடியக்கரை வருகை appeared first on Dinakaran.

Tags : Kodiak ,Vedaranyam ,Kodiakarai ,Nagai district ,Russia ,Iran ,Iraq ,Sri Lanka ,Siberia ,
× RELATED கோடியக்கரையில் குவிந்த வெளிநாட்டு...