×

ஜேஎன்.1 கொரோனா தொற்றால் பாதிப்பு பெரியளவில் இல்லாவிட்டாலும் பரிசோதனையை அதிகரிக்க முடிவு: பொது சுகாதாரத்துறை

சென்னை: ஜேஎன்.1 கொரோனா தொற்றால் பாதிப்பு பெரியளவில் இல்லாவிட்டாலும் பரிசோதனையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, 60 வயதிற்கு மேல் உள்ளவர்கள் என அறிகுறியுடன் வருபவர்களுக்கு தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விரைவாக தொற்றை கண்டுபிடித்து சிகிச்சையயை தொடங்குவதன் மூலம் இறப்பை கட்டுப்படுத்த பொதுசுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது. உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் பரிசோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post ஜேஎன்.1 கொரோனா தொற்றால் பாதிப்பு பெரியளவில் இல்லாவிட்டாலும் பரிசோதனையை அதிகரிக்க முடிவு: பொது சுகாதாரத்துறை appeared first on Dinakaran.

Tags : Public Health Department ,CHENNAI ,
× RELATED தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து...