×

தென்மாவட்டங்களுக்கு SETC ,TNSTC, PRTC, ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்: போக்குவரத்து துறை

செங்கல்பட்டு: கிளாம்பாக்கத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கு வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதற்காக 88.52 ஏக்கரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

புறநகர் பேருந்து நிலையத்தில் 130 அரசுப் பேருந்துகள், 85 ஆம்னி பேருந்துகளை நிறுத்தும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் 2,310 பேருந்துகளை இயக்கவும் போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் கடந்த 12-ம் தேதி 100-க்கும் மேற்பட்ட பேருந்துகளை இயக்கி முதற்கட்ட சோதனை ஓட்டம் நடைபெற்றது. பேருந்து நிலைய வளாகத்திற்குள் வெளியூர், மாநகர பேருந்துகள் மட்டுமின்றி ஆம்னி பேருந்துகளும் செல்ல வசதி செய்யப்பட்டது.

நவீன வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

ரூ.394 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு வரும் போது தினமும் ஒரு லட்சம் பயணிகள் பயன் பெறுவர். பேருந்து நிலையத்தில் மருத்துவமனை, 4 பெரிய உணவகங்கள், 100 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. 4 சுத்திகரிப்பு அமைப்புகள் மூலம் 12 இடங்களில் 24 மணி நேரம் குடிநீர் வசதி, 540 கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் நவீன தொழில்நுட்பத்தில் 2 கீழ் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 260 கார்கள், 568 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வகையில் முதல் தளம் கட்டப்பட்டுள்ளது. 2வது தளத்தில் 84 கார்கள் மற்று 2,230 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவுக்கு வசதிகள் உள்ளன.

கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்ட பேருந்துகள்:

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களான SETC ,TNSTC ,PRTC மற்றும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.

கிளாம்பாக்கத்தில் இருந்து இணைப்புப் பேருந்துகள்:

கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வண்டலூர் உள்ளிட்ட இடங்களுக்கு இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.

கிளம்பாக்கம்-கோயம்பேடு இடையே 70V பேருந்து

கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு 70V, 70C, 104CCT பேருந்து 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-தாம்பரம் இடையே 55V பேருந்து

கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரத்துக்கு 55V, M18 எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்

கிளாம்பாக்கம்-வேளச்சேரி இடையே 91R பேருந்து

கிளாம்பாக்கத்தில் இருந்து வேளச்சேரிக்கு 91R எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-கிண்டி இடையே 18ACT பேருந்து

கிளாம்பாக்கத்தில் இருந்து கிண்டிக்கு 18ACT எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்

கிளாம்பாக்கம்-திருவான்மியூர் இடையே 95X பேருந்து

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவான்மியூருக்கு 95X எண் கொண்ட பேருந்து 8 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-அடையாறு இடையே 99X பேருந்து

கிளாம்பாக்கத்தில் இருந்து அடையாறு இடையே 99X எண் கொண்ட பேருந்து 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

கிளாம்பாக்கம்-பிராட்வே இடையே 21G பேருந்து

கிளாம்பாக்கத்தில் இருந்து பிராட்வே இடையே 21G எண் கொண்ட பேருந்து 10 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

The post தென்மாவட்டங்களுக்கு SETC ,TNSTC, PRTC, ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்: போக்குவரத்து துறை appeared first on Dinakaran.

Tags : SETC ,TNSTC ,PRTC ,OMNI BUSES ,SOUTHERN ,GLAMBAGH ,DEPARTMENT OF TRANSPORT ,Chengalpattu ,Transport Department ,Klambakh ,Chief Minister ,Stalin ,Clambakkam Artist Centennial Bus Station ,Coimbed ,Omni ,Southern Districts ,Glambakal ,Dinakaran ,
× RELATED தென் மாவட்டங்களுக்கு செல்லும் TNSTC...