×

கொடுமுடி அருகே வன்கொடுமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: கடையடைப்பு

கொடுமுடி: ஒன்றிய, மாநில அரசுகள் வன்கொடுமை (பி.சி.ஆர்) சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கொடுமுடி அருகே உள்ள தாமரைபாளையத்தில் பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே தாமரைப்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவில் திருவிழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது ஒரு சமூகத்தை சேர்ந்த சில இளைஞர்கள் மற்றொரு சமூகத்தை சேர்ந்த பெண்களை ஈவ் டீசிங்க் செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இரு தரப்பிலும் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதில், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதியப்பட்டதை கண்டித்தும், ஈவ் டீசிங்க் செய்த இளைஞர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் பொதுமக்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

தாமரைப்பாளையம் கொத்துக்காரர் சுந்தரம் தலைமையில் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். இதில், ஒன்றிய, மாநில அரசுகள் வன்கொடுமை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பெண்கள் உட்பட 750 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தாமரைப்பாளையத்தில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பாஜ, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன் தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post கொடுமுடி அருகே வன்கொடுமை சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்: கடையடைப்பு appeared first on Dinakaran.

Tags : Kodumudi ,Thamaraipalayam ,Union ,Bhagavathymman temple festival ,Kodumudi, Erode district ,
× RELATED மாணவ ஊரக வேளாண் பணி