×

நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை பணி நிறைவு: ரயில் இன்ஜின் இயக்கி சோதனை

நாகர்கோவில்: நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை பணி நிறைவு பெற்றதையடுத்து ரயில் இன்ஜினை இயக்கி சோதனை செய்யப்பட்டது. நாகர்கோவிலில் இருந்து மதுரை வரை உள்ள ரயில் பாதையை இரு வழிபாதையாக மாற்ற மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி 159 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும், மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் 102 கி.மீ தூரம் ஒரு திட்டமாகவும் என இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது.  இதில் மதுரை – மணியாச்சி – தூத்துக்குடி பாதை பணிகளின் திட்ட மதிப்பீடு ரூ. 1,182.31 கோடி ஆகும். நாகர்கோவில் – மணியாச்சி பாதை திட்ட மதிப்பீடு ரூ. 1,003.94 கோடி ஆகும். ரயில்வே துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஆர்.வி.என்.எல். நிறுவனம் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் மணியாச்சி – திருநெல்வேலி – நாகர்கோவில் இடையிலான 102 கி.மீ. தூர திட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. நாகர்கோவில் – திருநெல்வேலி ரயில் பாதையில் ஆரல்வாய்மொழி, மேலப்பாளையம் பகுதிகளில் மட்டும் பணிகள் பாக்கி இருந்தன. இதில் ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் இடையே சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் நடந்தன. இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. கூடுதல் தண்டவாளம், சிக்னல்கள், மின் இணைப்பு கேபிள்கள் பதிக்கும் பணிகளும் முடிந்தன. இதையடுத்து நேற்று நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே புதிதாக அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயில் இன்ஜின் இயக்கி சோதனை செய்யப்பட்டது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் யார்டு வரை ரயில் இன்ஜின் வெற்றிக்கரமாக வந்தது.

The post நாகர்கோவில் – ஆரல்வாய்மொழி இடையே இரட்டை ரயில் பாதை பணி நிறைவு: ரயில் இன்ஜின் இயக்கி சோதனை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Aralwaimozhi ,Madurai ,Maniachi ,Dinakaran ,
× RELATED தோவாளை அருகே நான்குவழிச்சாலையில்...