×

துறையூர் ஆதனூரில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி

 

துறையூர், டிச. 30: துறையூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமமான ஆதனூரில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகைமையின் சார்பாக நெல்லுக்கு பின்னால் சாகுபடி செய்ய வேண்டிய பயிர்கள் குறித்தும், அதற்கான தொழில் நுட்பங்கள் குறித்தும் பயிற்சி நடைபெற்றது. ஆதனூர் ஊராட்சி தலைவர் பாலாம்பாள் தலைமை வகித்தார்.

துறையூர் வேளாண்மை அலுவலர் கமல், திருச்சி மாவட்ட சிறுகமணி வேளாண் அறிவியல் நிலைய பயிர் பெருக்கவியல் இணை பேராசிரியை முனைவர் ஷகிலா, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் நெல் சாகுபடிக்கு பிறகு கேழ்வரகு, சோளம், கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் சாகுபடி செய்தல், சிறுதானிய விதை இருப்பு, இடுபொருள்கள், அவற்றுக்கு அரசு வழங்கும் மானியம் மற்றும் நிலக்கடலை பயிரிடும் விவசாயிகள் மானிய விலையில் ஜிப்சம் பெறுதல், மண், நீர் மாதிரி எடுக்கும் முறைகள்,

மண் மாதிரி கொடுத்த விவசாயிகளுக்கு பகுப்பாய்வின் முடிவுகளின் மண் வள அட்டைகளை வழங்கி விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சியில் துறையூர் வட்டாரத்தைச் சேர்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு தலா 20 கிலோ மண்புழு உரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் சதீஷ்குமார் , ஆத்மா திட்ட அலுவலர்கள் சரண்யா, சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.

The post துறையூர் ஆதனூரில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Adanur Dharayur ,Agricultural Technology Management Agency ,Adanur ,Dariyur ,
× RELATED மிளகாய் தோட்டத்தில் சாறு உறிஞ்சும்...