×

தென்னை விவசாயிகளுக்கு தோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம்

வருசநாடு, டிச. 30: கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் தென்னை விவசாயிகளுக்கு நோய் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதற்கு தேனி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் பிரபா தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் கல்பனா, கடமலை-மயிலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ராஜபிரியதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கடமலை-மயிலை ஒன்றியத்தை சேர்ந்த ஏராளமான தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இலை கருகல், குருத்தழுகல் மற்றும் வாடல் நோய்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும் சிவப்பு கூண்வண்டு, மற்றும் காண்டாமிருகவண்டு, கருந்தலை புழு உள்ளிட்டவற்றை தடுக்கும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை கடமலை-மயிலை வட்டார தோட்டக்கலை துறை பணியாளர்கள் செய்திருந்தனர்.

The post தென்னை விவசாயிகளுக்கு தோய்த்தடுப்பு விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.

Tags : Varusanadu ,Horticulture Department ,Mayiladumparai ,Kadamalai-Mylai Union ,Theni District ,Horticulture ,Deputy Director ,Prabha ,Assistant Professor ,Kalpana ,
× RELATED மூலவைகை கரையோரங்களில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும்