×

மகளிர் சுயஉதவிக் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி

 

கமுதி, டிச.30: கமுதியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட செயல் அலகின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களை வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டாரங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களின் உற்பத்தி பொருட்களின் வாங்குவோர் மற்றும் விற்போர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. இதனை இப்பகுதியில் உள்ள மொத்த கொள்முதலாளர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து சுய உதவி குழுக்களில், கொள்முதல் செய்ய உத்தரவாதம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் வட்டார இயக்க மேலாளர்கள் மயில்ராஜ், அரசகுமார், செந்தில்வேல் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் அழகப்பன், மேலாளர் தங்கபாண்டியன் மாவட்ட வளப் பயிற்றுநர் (பண்ணை) நம்புரஞ்சித் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் பில்லத்தியான், சிவக்குமார், அருள்தாஸ், சாந்தி, திரவியம், தமிழரசி, மாரிமுத்து மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், உற்பத்தி பொருள் கொள்முதலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post மகளிர் சுயஉதவிக் குழுவினர் உற்பத்தி பொருள் கண்காட்சி appeared first on Dinakaran.

Tags : Women's Self Help Groups Product Exhibition ,Kamudi ,Tamil Nadu State Rural Livelihood Movement District Action Unit ,Kudaladi ,Women's Self Help Group Product ,Dinakaran ,
× RELATED கமுதி பேரூராட்சியில் புதுப்பொலிவு பெறும் சிறுவர் பூங்கா