×

அரசு துறை சேவைகளை எளிதில் பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல்

தாம்பரம், டிச.30: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சரால் அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 3.1.2024 அன்று தாம்பரம் மாநகராட்சியின் 2வது மண்டலத்துக்கு உட்பட்ட 9, 13, 14, 24, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு குரோம்பேட்டை, ஜிஎஸ்டி சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்திலும், 4வது மண்டலத்துக்கு உட்பட்ட 32, 33, 49, 50, 51, 52, 53, 60 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு தாம்பரத்தில் உள்ள அம்பேத்கர் திருமண மண்டபத்திலும் இந்த சிறப்பு முகாம் நடைபெறும். 1வது மண்டலத்துக்கு உட்பட்ட 5, 6, 7, 8, 10, 11, 12 ஆகிய வார்டுகளுக்கு பம்மல் எல்.சி மஹாலில் 4.1.2024 அன்றும், 1வது மண்டலத்துக்கு உட்பட்ட 1, 2, 3, 4, 29, 30, 31 ஆகிய வார்டுகளுக்கு அனகாபுத்தூர், மன்னார்சாமி கோவில் தெருவில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 5.1.2024 அன்றும் இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

5வது மண்டலத்துக்கு உட்பட்ட 65, 66, 67, 68, 69, 70 ஆகிய வார்டுகளுக்கு இந்திரா நகர், அகரம் மெயின் ரோடு, பழனி கல்யாண மண்டபத்தில் 6.1.2024 அன்றும், 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 39, 40, 41, 42, 34, 43, 44 ஆகிய வார்டுகளுக்கு வேளச்சேரி பிரதான சாலை, செம்பாக்கம் பகுதியில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில் 8.1.2024 அன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 45, 46, 47, 48, 62, 63, 64 ஆகிய வார்டுகளுக்கு வேளச்சேரி பிரதான சாலை, சேலையூர் பகுதியில் உள்ள அபிராமி மஹலில் 9.1.2024 அன்றும், 4வது மண்டலத்துக்குட்பட்ட 54, 55, 56, 57, 58, 59, 61 ஆகிய வார்டுகளுக்கு முடிச்சூர் ரோடு, பழைய பெருங்களத்தூர் பகுதியில் உள்ள பத்மாவதி கல்யாண மண்டபத்தில் 10.1.2024 அன்றும் சிறப்பு முகாம் நடைபெறும். 15, 16, 17, 18, 19, 20, 21 ஆகிய வார்டுகளுக்கு கீழ்கட்டளை பெரிய தெருவில் உள்ள விஜயலட்சுமி கல்யாண மண்டபத்தில் 11.1.2024 அன்றும், 3வது மண்டலத்துக்கு உட்பட்ட 22, 23, 25, 35, 36, 37, 38 ஆகிய வார்டுகளுக்கு குரோம்பேட்டை, ஆர்.பி ரோடு, விநாயகா ராம் கணேஷ் மஹாலில் 12.1.2024 அன்றும் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, வர்த்தக உரிமம், குடிநீர் வரி பெயர் மாற்றம், காலிமனை வரிவிதிப்பு சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை, தொழில் வரி, தமிழ்நாடு மின்வாரியம் மூலமாக புதிய மின் இணைப்பு, மின்கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின்சுமை கட்டணங்கள், வருவாய்த்துறையினர் மூலமாக பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, நில அளவீடு வாரிசு சான்றிதழ், சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள், முதியோர், விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், மாற்றுத்திறனாளி, முதிர்கன்னி, மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித்தொகைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கரவண்டி, செயற்கை கால், காதுகேட்கும் கருவி மற்றும் இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள், சுயதொழில் வங்கிகடன் உதவி, கல்வி உதவித்தொகை, தொழில் பயிற்சி மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை மூலமாக நலவாரியங்களில் உறுப்பினர் பதிவு, பதிவு புதுப்பித்தல் மற்றும் ஓய்வூதியம், உதவித்தொகை, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை மூலமாக கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு வேண்டிய விண்ணப்பம், வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான ஆணை, விற்பனை பத்திரம் பெற விண்ணப்பிக்கலாம். காவல்துறை மூலமாக பொருளாதார குற்றங்கள் தொடர்பான புகார்கள், நில அபகரிப்பு மற்றும் மோசடி, போக்சோ சட்டத்தின் கீழ் புகார்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டம், புதுமைப்பெண் கல்வி உதவித்திட்டம், ஆதரவற்றோருக்கான உதவித்தொகை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக கல்வி உதவித்தொகை மற்றும் வீட்டுமனை, இணைய வழி பட்டா பெற விண்ணப்பிக்கலாம்.

மேலும், தாட்கோ கடனுதவிகள், டாம்கோ, டாப்செட்கோ கடனுதவிகள், கூட்டுறவு கடனுதவிகள், மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான கடனுதவி ஆகிய தொடர்பான மனுக்களையும் முகாம் நடைபெறும் நாளன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை முகாம் நடைபெறும் பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வார்டுகளுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது மனுக்களை சமர்ப்பித்து பயன்பெறலாம். முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது கோரிக்கைக்கு ஏற்ப தொடர்பு ஆவணங்களையும் எடுத்து வரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post அரசு துறை சேவைகளை எளிதில் பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: தாம்பரம் மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram ,Tambaram Municipal Corporation ,Commissioner ,Akummeena ,Chief Minister ,Tamil Nadu ,Minister ,Tambaram Corporation Commissioner ,Dinakaran ,
× RELATED வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல...