×

ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக ₹1.37 லட்சம் மோசடி

தூத்துக்குடி, டிச. 30: தூத்துக்குடி சிஜிஇ காலனியை சேர்ந்தவர் பொப்புடி உதயகுமார்(36). இவர், தூத்துக்குடி தெர்மல் பவர் பிளாண்ட்டில் எலக்ட்ரிக்கல் மேனேஜராக உள்ளார். இவரிடம் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூகுள்பே மூலம் ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதை நம்பி உதயகுமார் கடந்த மே மாதம் கூகுள்பே மூலம் 4 தவணைகளாக ₹1 லட்சத்து 37 ஆயிரத்து 650 பணம் செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர் உதயகுமாருக்கு கூடுதல் லாபத்தையும் கொடுக்காமல், செலுத்திய பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து உதயகுமார் தேசிய சைபர்கிரைம் போர்ட்டலில் புகார் செய்தார். இதையடுத்து தூத்துக்குடி எஸ்பி பாலாஜிசரவணன் உத்தரவுப்படி, தூத்துக்குடி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிந்து, அவரது தலைமையில் தனிப்படையினர் ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

The post ஆன்லைனில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் தருவதாக ₹1.37 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Popudi Udayakumar ,Tuticorin CGE Colony ,Thoothukudi Thermal Power Plant ,Dinakaran ,
× RELATED பேக்கரி மாஸ்டரை தாக்கியவர் கைது