- Dhenkanikottai
- தளி
- சட்டமன்ற உறுப்பினர்
- ராமச்சந்திரன்
- சரந்தப்பள்ளி, பல்லப்பள்ளி, செட்டிப்பள்ளி
- தாளி சட்டமன்றத் தொகுதி
- பாவர்
- மயநாயக்கனப்பள்ளி கிராமம்
- சரந்தப்பள்ளி பஞ்சாயத்
தேன்கனிக்கோட்டை, டிச.30: தளி சட்டமன்ற தொகுதி சாரண்டப்பள்ளி, பள்ளப்பள்ளி, செட்டிப்பள்ளி ஊராட்சியில் ₹44 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகளை தளி எம்எல்ஏ ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார். சாரண்டபள்ளி ஊராட்சி, மாயநாயக்கனப்பள்ளி கிராமத்தில் ₹4 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைத்தல், ₹2 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், ₹3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைத்தல், ஜோகட்டி கிராமத்தில் ₹3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, இந்திரா நகரில் ₹8 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, நேரலட்டி கிராமத்தில் ₹3 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, சாரண்டப்பள்ளி கிராமத்தில் ₹4 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, பள்ளிப்பள்ளியில் ₹16 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், செட்டிப்பள்ளியில் மேடுமுத்துக்கோட்டை கிராமத்தில் ₹2 லட்சம் மதிப்பில் பைப்லைன் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை ராமச்சந்திரன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில், விவசாய சங்க மாநில துணை தலைவர் லகுமைய்யா, மாவட்ட கவுன்சிலர் குமார், ஒன்றிய கவுன்சிலர்கள் சென்னீரப்பா, பிரஷாந்த், ஜெகதீஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post ₹44 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள் appeared first on Dinakaran.