×

குட்கா விற்ற 2 கடைக்கு சீல்

தர்மபுரி, டிச.30: தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, பைரநத்தம், மஞ்சவாடி உள்ளிட்ட பகுதிகளில் கள ஆய்வு செய்தனர். இதையடுத்து வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் மற்றும் போலீசார், கடைகளில் ஆய்வு செய்தனர். அப்போது 2 கடைகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், கடையின் உரிமையாளர்களுக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post குட்கா விற்ற 2 கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Gutka ,Dharmapuri ,Dharmapuri District Food Safety Department ,Papriprettipatti ,Bommidi ,Byranatham ,Manjwadi ,District Food Safety Officer ,Kumanan ,Dinakaran ,
× RELATED வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல்!!