×

ராமேஸ்வரம்-ஹூப்ளிக்கு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமேஸ்வரம்-ஹூப்ளி ரயில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 9 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு ஹூப்ளிக்கு மறுநாள் மாலை 7.25 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் ஜனவரி 7, 14, 21 பிப்ரவரி 4, 11, 18, 25 மார்ச் 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஹூப்ளியிலிருந்து ராமேஸ்வரம் வரை இயக்கப்படும் ரயில் சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் ஜனவரி 6, 13, 20, 27 பிப்ரவரி 3, 10, 17, 24 மார்ச் 2, 9, 16, 23 மற்றும் 30ம் தேதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

The post ராமேஸ்வரம்-ஹூப்ளிக்கு ரயில் சேவை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Hubli ,Southern Railway ,CHENNAI ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...