×

ராமர் கோயில் திறப்பு விழா சோனியா பங்கேற்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு: காங். அறிவிப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதனை பிரதமர் மோடி திறந்து வைக்க இருக்கிறார். இவ்விழாவில் கலந்துகொள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சார்ந்தவர்கள் மற்றும் சாதுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட 6,000 பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திறப்பு விழாவில் கலந்துகொள்ள போவதில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஏற்கனவே தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இதில் பங்கேற்கவில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.இந்நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ‘’காங்கிரஸ் ’நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்,’’ என்று கூறியுள்ளார்.

The post ராமர் கோயில் திறப்பு விழா சோனியா பங்கேற்பு குறித்து உரிய நேரத்தில் முடிவு: காங். அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sonia ,Ramar Temple ,NEW DELHI ,RAMAR TEMPLE KUMBA BISHEK ,IOTHI ,UTTAR PRADESH ,Modi ,Opening ,Dinakaran ,
× RELATED அயோத்தி கோயில் அழைத்து செல்வதாக 100 பேரிடம் மோசடி