×

பூக்கள் செலவை ஏற்றது சென்னை மாநகராட்சி

சென்னை: உடல்நலக்குறைவால் காலமான விஜயகாந்த் உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த அலுவலகம் மிகவும் குறுகலாக இருந்தால் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் கடும் நெரிசலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விஜயகாந்த் உடலை வேறு இடத்துக்கு மாற்ற ஆலோசனை நடைபெற்றது. தொடர்ந்து சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலை வைக்க அரசு சார்பில் உடனடியாக ஒப்புதல் வழங்கப்பட்டது. மேலும் விஜயகாந்த் உடல் வைப்பதற்கான மேடை உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் சென்னை மாநகராட்சியே ஏற்றுக்கொண்டு செய்தது. தொடர்ந்து விஜயகாந்த் உடலை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்வதற்கான திறந்தவெளி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வாகனத்தை சுற்றி பூக்கள் உள்பட அனைத்து அலங்கார செலவையும் மாநகராட்சியை ஏற்று சிறப்பாக செய்து கொடுத்தது. மேலும் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியிலும் பூக்கள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

The post பூக்கள் செலவை ஏற்றது சென்னை மாநகராட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,CHENNAI ,Vijayakanth ,DMUD ,Coimbatore, Chennai ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...