×

நிர்மலா சீதாராமன் பேட்டி மனித நேயத்துடன் இருந்த அரசியல்வாதி விஜயகாந்த்

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் உடலுக்கு ஒன்றிய அரசின் சார்பில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலதா சீதாராமன் நேற்று காலை நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது பாஜ தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஒன்றிய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். மேலும் பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு நிர்மலா சீதாராமன் ஆறுதல் கூறினார். தொடர்ந்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டி: விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு பிரதமர் மோடி உடனடியாக டிவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்தார். மேலும் ஒன்றிய அரசின் சார்பாக நீங்கள் கிளம்பி போக வேண்டும். அவர்கள் குடும்பத்தை சந்திக்க வேண்டும். அவர்கள் தொண்டர்களை சந்திக்க வேண்டும். இந்த துக்கத்தில் நாமும் பங்கேற்க வேண்டும்.

அங்கேயும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதனால், உடனடியாக புறப்பட்டு வந்தேன். விஜயகாந்த் மக்களுக்காக பாடுபட்டவர். அவர் வீட்டுக்கு வந்த ஒருவரை கூட, சாப்பாடு போடாமல் அனுப்பியது இல்லை. ரொம்ப இளகிய மனம் படைத்தவர். கஷ்டத்தை பார்க்க முடியாத மனம். அதனால், தன்னோடு இருக்கின்ற எல்லாருக்கும், தனக்கு கிடைக்கின்ற அதே வசதிகள் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று ரொம்ப முயற்சி செய்தவர். மனித நேயத்துடன் இருந்த அரசியல்வாதி. விஜயகாந்த் நம்மிடம் இல்லை. துக்கத்தை வர்ணிக்க வார்த்தை இல்லை. உங்கள் மனதில் இருக்கும் துக்கம் தான் எங்கள் எண்ணத்திலும் உள்ளது. அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post நிர்மலா சீதாராமன் பேட்டி மனித நேயத்துடன் இருந்த அரசியல்வாதி விஜயகாந்த் appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,Vijayakanth ,Chennai ,Union Government ,Union Finance Minister ,Nirmalatha Sitharaman ,Chennai Island ,BJP ,President ,Annamalai ,Union ,Minister of State ,Ponradhakrishnan ,
× RELATED ‘ஒன்னுமே செய்யாம லாபம் அள்ளுறீங்களே...