×

இது வரை 1.35 லட்சம் பேர் விண்ணப்பம் ஹஜ் பயண ஒதுக்கீடு இடங்கள் அதிகரிக்கிறது: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் பேட்டி

சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் சென்னையில் அளித்த பேட்டி: 2024ம் ஆண்டு ஹஜ் பயணம் 100 சதவீதம் டிஜிட்டல் செய்யப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் இருந்து 1 லட்சத்து 35 ஆயிரம் ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளது. தமிழகத்தில் ஹஜ் விண்ணப்பங்கள் வழங்க இன்னும் 16 நாள் கால அவகாசம் உள்ளது. தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஹஜ் விண்ணப்பங்கள் வந்து உள்ளன. இந்த ஆண்டு ஹஜ் பயண ஒதுக்கீடு அதிகமாக கிடைக்க கூடிய வாய்ப்புகள் உள்ளன. உலக இஸ்லாமிக் கவுன்சில் கூட்டத்தில் மத்திய மந்திரி ஸ்ருதி ரானியுடன் நானும் வருகிற ஜனவரி 19ம் தேதி பங்கேற்க உள்ளோம்.

சென்னையில் இருந்து ஜெட்டாவிற்கு நேரடி விமான சேவை பல ஆண்டுகளுக்கு பின் இயக்குகிறது. ஜித்தாவிற்கு நேரடியாக செல்வதால் ஐந்தரை மணி நேரத்தில் செல்வதால் பயண நேரம் குறைகிறது. மேலும் 200 ரியால் முதல் 610 ரியால் வரை பணம் மிச்சம் ஆகும். நேரடி விமான சேவையை சென்னையில் இருந்து தொடங்க வேண்டும் என இந்திய ஹஜ் அசோசியேஷன் சார்பாக கடந்த 3 ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. நேரடி விமான சேவையை தொடங்க உதவிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியா உம்ரா, ஹஜ் துறை அமைச்சருக்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post இது வரை 1.35 லட்சம் பேர் விண்ணப்பம் ஹஜ் பயண ஒதுக்கீடு இடங்கள் அதிகரிக்கிறது: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Indian Hajj Association ,president ,Abubakar ,Chennai ,Hajj Association of India ,Hajj ,India ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பை எந்த...