×

பெருமாட்டுநல்லூரில் ஆளுங்கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் ஊராட்சி தலைவர்: போலீசில் திமுக ஒன்றிய செயலாளர் புகார்

கூடுவாஞ்சேரி: பெருமாட்டுநல்லூரில் ஆளுங்கட்சியான திமுகவின் பெயரை ஊராட்சி மன்றத் தலைவர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார். அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஒன்றியக்குழு துணை தலைவருமான வி.எஸ்.ஆராமுதன், நேற்று ஆளுங்கட்சியான திமுகவின் பெயரை பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்.

அவர்மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுவாஞ்சேரி காவல் நிலைய இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தார்.அப்புகார் மனுவில், பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராகப் பொறுப்பு வகித்து வரும் பகவதி நாகராஜன், ஏற்கெனவே அப்பகுதி பாமக தலைவராக இருந்துள்ளார். பின்னர் ஊராட்சி மன்றத் தலைவரும் அவரது கணவரும் ஆளுங்கட்சியான திமுகவில் இணைந்தது போல், தற்போது அவர்களின் காரில் கட்சிக்கொடியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜன் திமுக கரைவேட்டி கட்டிக்கொண்டு, பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறார்.

எனினும், அவர்கள் இருவரும் திமுகவில் இன்னும் இணையவில்லை. அதேபோல், ஆளுங்கட்சியான திமுக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி மன்றத் தலைவர் பகவதி நாகராஜனும் அவரது கணவரும் செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளை திமுக நிர்வாகிகள் தட்டி கேட்கும்போது மிரட்டும் வகையில் பேசி வருகின்றனர்.ஆளுங்கட்சியில் சேராமல் பல்வேறு ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் அவரது கணவர்மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக ஒன்றிய செயலாளர் வி.எஸ்.ஆராமுதன் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post பெருமாட்டுநல்லூரில் ஆளுங்கட்சி பெயரை தவறாக பயன்படுத்தும் ஊராட்சி தலைவர்: போலீசில் திமுக ஒன்றிய செயலாளர் புகார் appeared first on Dinakaran.

Tags : Panchayat ,Perumattunallur ,DMK union ,Kuduvanchery ,DMK ,Aramudhan ,Guduvancheri ,station ,Dinakaran ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு