×

விண்ணுலகிற்கு பசியாற்ற சென்ற சொக்கத்தங்கம்..மக்களிடையே நல்லெண்ணங்களை விதைத்த மாமனிதர்; கண்ணீரோடு விடைகொடுக்கும் தமிழகம்!!

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். மியாட் மருத்துவமனையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவரது உடல் சில மணி நேரம் சாலிகிராமம் வீட்டில் வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு கட்சித் தொண்டர்களும் பல்வேறு பிரபலங்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்தனர்.இதனையடுத்து, விஜயகாந்தின் உடல் தீவுத்திடல் மைதானத்தில் அஞ்சலிக்காக இன்று வைக்கப்பட்டது.

அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் விஜயகாந்த் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. தீவுத்திடலில் தொடங்கிய இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், ரசிகர்களும் கலந்துகொண்டு கண்ணீருடன் பிரியாவிடை அளித்தனர். இதைத் தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் உடல் நல்லடக்க நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.கேப்டன் விஜய்காந்தின் இறுதி சடங்கை காண பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால், கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தின் வாயிலில் பெரிய LED திரை அமைக்கப்பட்டுள்ளது..விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்பர்.

The post விண்ணுலகிற்கு பசியாற்ற சென்ற சொக்கத்தங்கம்..மக்களிடையே நல்லெண்ணங்களை விதைத்த மாமனிதர்; கண்ணீரோடு விடைகொடுக்கும் தமிழகம்!! appeared first on Dinakaran.

Tags : Sokkathangam ,Tamil ,Nadu ,CHENNAI ,DMUDIK ,Vijayakanth ,Myatt Hospital ,Saligramam ,Demudika ,Coimbatore ,Chokkatangam ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...