×

நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த பிளஸ் 1 மாணவி தூக்கில் தற்கொலை

கோவை: கோவை ராமநாதபுரம் புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் மாசாணராஜ் (44), டிவி மெக்கானிக். இவரது மகள் நவீன்யா (16) பீளமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்காக ஜேஇஇ நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்காக பயிற்சியும் பெற்று வந்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் நடந்த மாதாந்திர தேர்வில் அவர் குறைந்த மதிப்பெண் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று காலை அவரது பெற்றோர் வெளியே சென்றனர்.

மதியம் திரும்பி வந்து பார்த்த போது, அறை உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்த போது, நவீன்யா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் நவீன்யாவை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் நவீன்யா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

The post நுழைவுத்தேர்வுக்கு தயாராகி வந்த பிளஸ் 1 மாணவி தூக்கில் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Masanaraj ,Puliyakulam ,Ramanathapuram, Coimbatore ,Navinya ,Beelamet ,
× RELATED புலியகுளம் சிறுவர், சிறுமியர் மன்றத்தில் கலைவிழா