×

72 குண்டுகள் முழங்க கேப்டனுக்கு இறுதிச் சடங்கு : 200 பேர் மட்டுமே அனுமதி; ஈவெரா சாலை வழியாக செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்!!

சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று (டிச.28) காலை காலமானார். அவரது மறைவையடுத்து அவரது உடல் சென்னை தீவுத் திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் பல்வேறு பிரபலங்களும் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.இதைத் தொடர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இதனிடையே விஜயகாந்த் இறுதி ஊர்வலம் ஈவெரா சாலை வழியாக நடைபெறும் என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. தீவுத்திடலில் இருந்து கோயம்பேடு அலுவலகத்திற்கு ஈவெரா காலை வழியாக இறுதி ஊர்வலம் செல்லவுள்ளது.ஈவெரா சாலை வழியாக செல்ல பிற வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இறுதி ஊர்வலம் முடியும் வரை ஈவெரா சாலை வழியாக செல்வதை தவிர்க்க போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் உடல் நல்லடக்க நிகழ்வில் குடும்பத்தினர், உறவினர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, முக்கிய பிரமுகர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்தின் இறுதிச்சடங்கில் தமிழக அரசு சார்பில் 2 அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ. அன்பரசன் அரசு சார்பில் இறுதிச்சடங்கில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post 72 குண்டுகள் முழங்க கேப்டனுக்கு இறுதிச் சடங்கு : 200 பேர் மட்டுமே அனுமதி; ஈவெரா சாலை வழியாக செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : EVERA ,Chennai ,DMD ,president ,Vijayakanth ,DMDK ,Chennai Island Cemetery ,
× RELATED நடிகரும் தேமுதிக தலைவருமான...