×

ஜிஇஎம்-ல் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை போர்ட்டலில் கொள்முதல் செய்வது கட்டாயம்

*அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் கலெக்டர் அறிவுறுத்தல்

கரூர் :ஜிஇஎம்-ல் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை போர்ட்டலில் கொள்முதல் செய்வது கட்டாயமாகும் என்று அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் கலெக்டர் தங்கவேல் அறிவுறுத்தினார்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசு மின்சந்தை (ஜிஇஎம்) மூலம் அரசுத் துறை பொருட்களை கொள்முதல் செய்தல் தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான பயிற்சி முகாமினை கலெக்டர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

ஜிஇஎம் என்பது தேசிய பொது கொள்முதல் போர்ட்டல், மத்திய, மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கான ஒரு ஆன்லைன் சந்தையாகும். பொதுவான பயன்பாட்டு பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கு, பொது கொள்முதல் செயல் முறையை வெளிப்படையானதாகவும், திறமையாகவும், உள்ளடக்கியதாகவும் மாற்ற ஜிஇஎம் முயற்சிக்கிறது. ஜிஎப்ஆர் 2017, 149 விதிகளின்படி மத்திய அரசு அமைச்சகங்கள், துறைகள், யூனியன் பிரதேசங்களுக்கு ஜிஇஎம்-ல் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை போர்ட்டல் மூலம் கொள்முதல் செய்வது கட்டாயமாகும்.

தமிழ்நாடு டெண்டர் சட்டம் 1998ன் படி, ஜிஇஎம் போர்ட்டல் மூலமும் கொள்முதல் செய்து கொள்ளலாம் என ஜிஒக்கள் மற்றும் திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 220 அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய 22 ஆயிரம் இரண்டாம் நிலை கணக்குகள் ஜிஇஎம்-ல் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழசு அரசு ஜிஇஎம் மூலம் 2,215 கோடி கொள்முதல் செய்துள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த 69 ஆயிரம் எம்எஸ்எம் (விற்பனையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்) போர்ட்டலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். ஜிஇஎம்-ல் 12ஆயிரம் தயாரிப்பு வகைகள் மற்றும் 300க்கும் கூடுதலாக சேவை வகைகள் உள்ளன.

ஜிஇஎம் போர்ட்டலை பயன்படுத்துவதன் முக்கிய நன்மைகள் என்னவென்றால், ஏல அறிவிப்பு அனைத்தும் பதிவு செய்யப்பட்ட விற்பனையாளர்கள் அனைவருக்கும் செல்லும் மற்றும் ஜிஇஎம்-ல் ஏல உருவாக்கம் அனைத்தும் ஸ்டேண்டர்டைஸ்டு செயல்முறையாகும். எனவே, காகித வெளியீட்டு செலவு மற்றும் டெண்டர் தயாரிப்பு நேரத்தை நாம் அகற்றலாம்.

தொழில் நுட்ப விபரக்குறிப்புகளின் தொகுப்பு, விதிமுறைககள் மற்றும் அனைத்தும் கொள்முதலை எளிதாக்கும் வகையில் ஜிஇஎம் போர்ட்டலில் முன்கூட்டியே வைக்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா, எம்எஸ்எம், இட ஒதுக்கீடு, நில எல்லை பகிர்வு, கொள்முதலில் பின்பற்றப்படும் நடைமுறைகள் போன்ற பல்வேறு அரசாங்க கொள்கைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து செயல்பாடுகளும் இந்த போர்ட்டலில் கிடைக்கிறது.

கழிவு மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்வதற்காக முன்னோக்கி ஏல வசதியையும் இது வழங்குகிறது. இது தவிர, மாநிலங்களுக்குள் உள்ளூர் விநியோகத்தை எளிதாக்குவதற்கும், அவர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தேசிய சந்தையை அவர்களுக்கு வழங்குவதற்கும், வாங்குபவர்களின் ஆதரவுடன் உள்ளூர் விற்பனையாளர்களை உள் வாங்குவதில் இது கவனம் செலுத்துகிறது.

மாநில மற்றும் மாநில வணிகத்திற்காக நியமிக்கப்பட்ட நோடல் அதிகாரியை தவிர, வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் ஆகிய இருவருக்குமே தமிழ்நாடு மாநிலத்தில் ஜிஇஎம் போர்ட்டல் யூஸேஜ் அதிகரிப்பதற்கான ஆலோசனையை ஜிஇஎம் நியமித்துள்ளது என இந்த கூட்டத்தில் கூறப்பட்டது.கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தண்டாயுதபாணி, தாசில்தார் (பேரிடா் மேலாண்மைத்துறை) பயிற்றுநர் சபரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஜிஇஎம்-ல் கிடைக்கும் பொருட்கள் மற்றும் சேவைகளை போர்ட்டலில் கொள்முதல் செய்வது கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : GEM ,Karur ,Thangavel ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டத்திற்கு 29ம் தேதி உள்ளூர் விடுமுறை!!