×

விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி தேமுதிக தொண்டர்கள் சாலை மறியல்: போலீசார் தடியடி

சென்னை: பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு அருகே தேமுதிக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி தேமுதிக தொண்டர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், ஈ.வெ.ரா. பெரியார் சாலை வழியாக கோயம்பேடுக்கு மதியம் 2.15 மணியளவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் விஜயகாந்த் இறுதிச்சடங்கில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் உட்பட 200 பேருக்கு மட்டும் அனுமதி எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு அருகே விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி தேமுதிக தொண்டர்கள் சாலை மறியல் செய்து வருகின்றனர். தேமுதிக அலுவலகத்திற்குள் அனுமதிக்க வலியுறுத்தி தேமுதிக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

அலுவலகத்திற்குள் அனுமதிக்க தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தேமுதிக தலைமை அலுவலகம் முன் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்குள் செல்ல ஏராளமானோர் முயற்சி செய்து வருகின்றனர். போலீஸ் தடுப்புகளை மீறி மக்கள் முன்னேறியதால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. 72 துப்பாகி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் கேப்டன் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

The post விஜயகாந்த் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அனுமதிக்கக் கோரி தேமுதிக தொண்டர்கள் சாலை மறியல்: போலீசார் தடியடி appeared first on Dinakaran.

Tags : Demutika ,Vijayakanth ,Chennai ,Demudika ,Coimbed ,Poonthamalli Highway ,TEMUTIKA ,VIJAYAKANT BODY ,E. ,. Ra ,Vijayakant ,Dinakaran ,
× RELATED புதிதாக யானை வழித்தடம் அமைக்கும்...