×

சின்னநட்டாத்தி, பெருங்குளம், சிவகளை பகுதியில் ஆய்வு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கனிமொழி எம்பி

ஏரல் : சின்னநட்டாத்தி, பெருங்குளம் மற்றும் சிவகளை பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ ஆகியோர் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். சாயர்புரம் அருகே உள்ள சின்னநட்டாத்தி, பெருங்குளம், மாங்கொட்டபுரம், சிவகளை உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்பி, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்வசி அமிர்தாஜ் எம்எல்ஏ ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். வீடுகளை இழந்தவர்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது பற்றியும் கேட்டறிந்து அந்தந்த துறைகளின் மூலம் உங்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தகர் அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் பிஜி ரவி, கொம்பையா, பேரூர் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புராஜ், ஒன்றிய துணை செயலாளர் சண்முகராஜா, பொதுக்குழு உறுப்பினர் செந்தில் ஆறுமுகம், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர பாலமுருகன், மாவட்ட காங். பொருளாளர் எடிசன், ஊடகப்பிரிவு முத்துமணி மற்றும் நட்டாத்தி கவுன்சிலர் பண்டாரம், ஊராட்சி செயலர் முத்துராஜ், சிவகளை ஆசிரியர் முனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

The post சின்னநட்டாத்தி, பெருங்குளம், சிவகளை பகுதியில் ஆய்வு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கனிமொழி எம்பி appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Chinnatathi ,Perungulam ,Shivalagu ,Minister ,Anitha Radhakrishnan ,Urvashi Amirtharaj ,MLA ,Chinnathathi ,Shivlagu ,Mankottapuram ,Sairapuram ,Chinnatathi, Perungulam, Sivalag ,Dinakaran ,
× RELATED நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல்;...